» சினிமா » செய்திகள்
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கவில்லை: சத்யராஜ் விளக்கம்
புதன் 29, மே 2024 3:59:34 PM (IST)
"பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கவில்லை" என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகையில், "இன்றைய கார்ப்பரேட் உலகத்தில் எல்லா விஷயத்தையும் தயாரிப்பு நிறுவனமே முறையாக அறிவிக்கும்.
நான் அதை சொல்ல முடியாது. அது தொடர்பான ஒப்பந்தம் உள்ளது. மீறினால் தேவையில்லாமல் என் மேல் வழக்கு வரும். ரஜினியுடன் ‘கூலி’ படத்தில் நடிக்கிறேன். மீதிக் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கவில்லை. அப்படியே நடித்தாலும், என்னுடைய நண்பர் மணிவண்ணனன் போல ஒரு இயக்குநர் படத்தை இயக்கினால் அது அப்படியே இருக்கும்.
விஜய் மில்டன் எடுக்கிறேன் என்றாலும் ஓகே. தவிர்த்து வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் இயக்கினால் பிரதமர் மோடி பியோபிக் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.