» சினிமா » செய்திகள்

பின்னணி பாடகி உமா ரமணன் மறைவு

வியாழன் 2, மே 2024 4:40:44 PM (IST)

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வந்த உமா ரமணன் கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது இல்லத்திலேயே நேற்றிரவு (மே 1) காலமானார்.

இசைக்கலைஞர் ஏவி ரமணனின் இசை குழுவில் பாடி வந்த உமா பின்னர் ரமணனையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1978ல் கிருஷ்ணலீலை படத்தில் இடம் பெற்ற மோகனக்கண்ணன் என்ற பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார்.

பின்னர் நிழல்கள் படத்தில் பூங்கதவே தாழ் திறவாய் பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான உமா, தொடர்ந்து இளையராஜா இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், வித்யாசாகர் உள்ளிட்ட வெகு சில இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினாலும் பெரும்பாலும் இளையராஜா இசையில் தான் அதிக பாடல்கள் பாடி உள்ளார். அவரது இசையில் மட்டும் கிட்டத்தட்ட 100 பாடல்களை பாடி உள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளில் சினிமா தவிர்த்து கணவர் ரமணன் உடன் இணைந்து 6 ஆயிரம் மேடை கச்சேரிகளில் பாடல்கள் பாடி உள்ளார். இவரது கணவர் ஏவி ரமணனும் இசை துறையை சார்ந்தவர் தான். அவரது இசையில் வெளியான நீரோட்டம்' படத்திலும் கணவர் உடன் இணைந்து பாடல்கள் பாடி உள்ளார். ரமணனும் பாடல்கள் பாடி உள்ளார். நிறைய படங்களில் குணச்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார்.உமா ரமணன் மறைவு, இசை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory