» சினிமா » செய்திகள்

அஜித் நடிக்கும் 'துணிவு' பர்ஸ்ட் லுக் வெளியீடு...!

வியாழன் 22, செப்டம்பர் 2022 12:15:46 PM (IST)

நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61-வது படத்திற்கு 'துணிவு' என தலைப்பிட்டுள்ளது படக்குழு. அதோடு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. 



இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு 'ஏகே61' என அறியப்பட்டது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்தின் அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்த நிலையில் இப்போது அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. துணிவே துணை என வீரம் படத்தில் அஜித்தின் வாகனத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை நினைவுப்படுத்தும் வகையில் இந்த தலைப்பு அமைந்துள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தில் துப்பாக்கி வைத்துக் கொண்டு கூலாக தாடி மற்றும் மீசையுடன் காட்சி அளிக்கிறார் அஜித். பின்னணியில் ரூபாய் நோட்டுகளில் இருப்பது போன்ற லே-அவுட்டில் படத்தின் தலைப்பு 'துணிவு' என இடம்பெற்றுள்ளது. அதன் கீழ் 'துணிவில்லையேல் வெற்றி இல்லை' (No Guts No Glory) என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வைத்து பார்க்கும் போது படத்தின் கதை வங்கியை மையமாக கொண்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory