» சினிமா » செய்திகள்

கமல்ஹாசன் தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

புதன் 27, ஜூலை 2022 10:45:43 AM (IST)நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க உள்ளார். 

தமிழ் திரைத்துறையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக என்ட்ரி கொடுத்தவர் உதயநிதி. தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். பின்னர் தொடர்ச்சியாக பல படங்களில் அவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

மறுபக்கம் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத் தயாரிப்பு மற்றும் திரைப்பட வெளியீட்டு பணிகளையும் கவனித்து வருகிறார். அண்மையில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தை வெளியிட்டிருந்தார். இந்தப் படத்தை கமல்ஹாசன் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார். இந்நிலையில், உதயநிதியை நாயகனாக வைத்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் புதிய திரைப்படம் ஒன்றை கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதனை உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory