» சினிமா » செய்திகள்

நிர்வாண படங்களை வெளியிட்ட நடிகர் ரன்வீர் சிங் மீது போலீசில் புகார்

செவ்வாய் 26, ஜூலை 2022 5:19:53 PM (IST)

சமூக வலைதளத்தில் நிர்வாண படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரன்வீர் சிங் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. 

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங். இவர் தான் எடுத்துக்கொண்ட வித்தியாசமான படங்களை வலைதளத்தில் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரன்வீர் சிங் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்த அதே சமயம் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிமி சக்கரவர்த்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "ரன்வீரின் இந்த புகைப்படங்கள் பாராட்டப்படுகின்றன. கருத்துகள் பெரும்பாலும் நல்ல விதமாக இருக்கின்றன. ஆனால் இதேபோன்ற படங்களை வெளியிட்டது ஒரு பெண்ணாக இருந்தால் இப்படி பாராட்டுகள் கிடைத்திருக்குமா என்று யோசிக்கிறேன்.

அந்த பெண்ணின் வீட்டை நீங்கள் எரித்திருப்பீர்கள், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி இருப்பீர்கள், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கும், அவளை அவமானப்படுத்தி இருப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.

இந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ள நடிகர் ரன்வீர் சிங், "நான் உடல் ரீதியாக நிர்வாணமாக இருப்பது என்பது எளிதானது. என்னுடைய ஆன்மா நிர்வாணமானது தான். எல்லாருடையதும் அப்படிதான் இருக்கும் என்பது உண்மை. நான் ஆயிரம் பேருக்கு முன்னால் நிர்வாணமாக இருக்க தயக்க மாட்டேன். ஆனால் எனக்கு முன்னால் இருப்பவர்கள் அசவுகரியமாக உணர்வார்கள் என்பது தான் உண்மை" என்றார்.

இந்தநிலையில் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரன்வீர் சிங் மீது மும்பை கிழக்கு புறநகரில் உள்ள செம்பூர் போலீஸ் நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த புகாரில், "நடிகர் ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளார். அவர்களின் கண்ணியத்தை அவமதித்துள்ளார். 

எனவே அவர் மீது இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என கூறப்பட்டு உள்ளது. இந்த புகார் மீது இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை, விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்தி நடிகர்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், ரன்வீர் சிங் நிர்வாண புகைப்பட சர்ச்சையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory