» சினிமா » செய்திகள்

சோழர்களின் வரலாறு தவறாக சித்தரிப்பு: இயக்குனர் மணிரத்னத்திற்கு நோட்டீஸ்!

சனி 16, ஜூலை 2022 4:20:00 PM (IST)



பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சோழர்கள் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் மணிரத்னத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பியுள்ள நோட்டீசில், சோழ வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது எனவும் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை மறைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல இன்னும் எத்தனை வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்பதை படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். தங்களுக்கு திரையிட்டு காட்டாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொன்னியின் செல்வன் படத்தில் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதா என்பது தங்களுக்கு தெரிய வேண்டுமென வக்கீல் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மணிரத்னம் படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் விக்ரம் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory