» சினிமா » செய்திகள்

சந்திரமுகி 2 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..!

சனி 16, ஜூலை 2022 3:35:37 PM (IST)



ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

இப்படம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த நிலையில், மைசூரில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ள்ளது.விரைவில் படபிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.



இதனிடையே சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளநிலையில், ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும் நடிகருமான லாரன்ஸ் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்தை கட்டியணைத்தும் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory