» சினிமா » செய்திகள்

காஞ்சனா 3 நடிகை மர்ம மரணம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 24, ஆகஸ்ட் 2021 10:25:58 AM (IST)

காஞ்சனா - 3 பட நடிகை கோவாவில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு வெளியான படம் காஞ்சனா - 3. முனி திகில் பட வரிசையில் ஒன்றான இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் அவருடன் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அலெக்ஸாண்ட்ரா ஜாவி என்ற ரஷ்ய மாடல் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அலெக்ஸாண்ட்ரா ஜாவி தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கொடுத்த தகவலில் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அலெக்ஸாண்ட்ராவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அலெக்ஸாண்ட்ராவின் உறவினர்களின் சம்மதம் பெற்றபிறகே பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்று ரஷ்ய தூதரக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த போட்டோகிராபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அலெக்ஸாண்ட்ரா போலீஸில் புகாரளித்திருந்தது ஊடகங்களில் செய்தியானது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory