» சினிமா » செய்திகள்

முதன் முறையாக விஜய் சேதுபதி - சந்தானம் படங்கள் மோதல்!

சனி 21, ஆகஸ்ட் 2021 12:07:51 PM (IST)விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் - சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. 

சினிமா துறையில் எப்போதும் இரண்டு முக்கிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்படும் இதில் எந்த படம் ஹிட்டாகும் எந்த படம் ப்ளாப் ஆகும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும். ஆனால், சமீப காலமாக கொரோனா காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படமால் இருப்பதால் இது போன்ற ரிலீஸுகளுக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை.  ஆனால், இப்போது முதல் முறையாக விஜய் சேதுபதி படத்தோடு சந்தானத்தின் படம் ஒரே நாளில் வெளியாகவுள்ளது. 

சந்தானம் 3 கெட்டப்களில் நடித்திருக்கும் ‘டிக்கிலோனா’ படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதே தேதியில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘துக்ளக் தர்பார்’ படம் ரிலீஸாக உள்ளது. இதில் டிக்கிலோனா படம் ஜீ5 தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது, துக்ளக் தர்பார் படம் அதே தேதியில் நேரடியாக சன் டிவியில் வெளியாக இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இதில் எந்த படம் நல்ல விமர்சனத்தை பெறும் என்கிற எதிர்ப்பார்ப்பு தற்போது நிலவிவருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory