» சினிமா » செய்திகள்

ஜப்பானில் வெற்றிநடை போடுகிறது ரஜினியின் தர்பார்!

செவ்வாய் 27, ஜூலை 2021 11:46:25 AM (IST)ஜப்பானில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடைபோடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக ரஜினிகாந்தின் முத்து திரைப்படம் ஜப்பான் நாட்டில், மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அங்கு ரஜினிகாந்த்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பாபா படம் வெளியான நேரத்தில் ஜப்பான் நாட்டு ரசிகர்கள் தமிழகம் வந்தனர். 

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான தர்பார் படம் தற்போது ஜப்பானில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.  திரையிடப்பட்ட திரையரங்குகளில் எல்லாம் திருவிழாக் கோலமாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக அங்கு அரங்கம் நிறைந்த காட்சிகளாக அங்கு ஒளிபரப்பாவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறப்புக் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.  தர்பார் தமிழ்நாட்டில் வெளியான போது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

விஜய் டிவியில் அக்.3 முதல் பிக்பாஸ் 5 ஆரம்பம்

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 12:35:24 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory