» சினிமா » செய்திகள்

நடிகை கன்னிகாவை கரம்பிடிக்கிறார் சினேகன் : கமல்ஹாசன் தலைமையில் திருமணம்

திங்கள் 26, ஜூலை 2021 12:10:43 PM (IST)

நடிகை கன்னிகா - கவிஞர் சினேகனின் திருமணம் வரும் 29ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற உள்ளது. 

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியுமான கவிü் சினேகன் நடிகை கன்னிகாவை காதல் திருமணம் செய்ய இருப்பதாகவும் இவர்களது திருமணம் சென்னையில் வரும் 29ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து சினேகன் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இது தொடர்பாக சினேகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனக்கும் , கன்னிகாவிற்கும் வருகிற 29-07- 2021 வியாழன் அன்று சென்னையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்தத் திருமண விழா உங்கள் அனைவரின் முன்னிலையிலும், உங்களின் அன்புக்கு மத்தியிலும் நடக்க வேண்டும் என்பதே என் பெரும் ஆவல். அது முடியாத சூழ்நிலையில் காலம் நம்மை நகர்த்திச் செல்கிறது என்பதால் உங்கள் அனைவரையும் அழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் வேரோடிக் கொண்டிருக்கிறது. அது நீங்களும் அறிந்ததே.

இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கூடி மகிழ்வது மனிதர்களுக்கே பேராபத்தாக இருப்பதால். நம் அனைவரின் நலன் கருதி மிக எளிமையாகவும் , தனி மனித இடைவெளியோடும். அரசு விதி முறைகளோடும் நடைபெறுகிறது.எனவே தளர்வுகளுக்கு பின் விரைவில் உங்களை சந்திக்கிறேன். இவ்வ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

விஜய் டிவியில் அக்.3 முதல் பிக்பாஸ் 5 ஆரம்பம்

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 12:35:24 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory