» சினிமா » செய்திகள்

திரைப்பட இயக்குநர் ஷங்கர் மகள் திருமண விழா: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

திங்கள் 28, ஜூன் 2021 11:29:38 AM (IST)



திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள் திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார் .
இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் திருமணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. கரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே விழாவில் கலந்து கொண்டனர். 

திருமண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். கரோனா பெருந்தொற்று படிப்படியாக குறைந்து இயல்புநிலை திரும்பியவுடன் முக்கியப் பிரமுகர்கள், திரையுலகத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து சிறப்பான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமணத்துக்கு வருகை தந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஷங்கர் ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது: "மகளின் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்தியது மறக்க முடியாத ஆசிர்வாதம். இதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மணமக்களை வாழ்த்திய மா. சுப்ரமணியன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory