» சினிமா » செய்திகள்

கமல் ஹாசன் படத்தின் சண்டை இயக்குநர்களாக அன்பறிவ் ஒப்பந்தம்

திங்கள் 14, ஜூன் 2021 5:34:11 PM (IST)



கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் சண்டை இயக்குநர்களாக தேசிய விருது வென்ற அன்பறிவ் இரட்டையர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

விஜய் நடிக்க மாஸ்டர் எனும் பெரிய ஹிட் கொடுத்த லோகேஷின் அடுத்த படம் விக்ரம். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையில் இப்படம் உருவாக இருக்கிறது. கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்கான அறிமுக வீடியோ இணையத்தில் வைரலானது. கேங்ஸ்டர் டிராமாவாக இப்படம் உருவாக இருக்கிறது. படத்தில் சண்டைக் காட்சிகள் பிரதானமாக இருக்குமாம். அதுவும், பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் இடம்பெற இருக்கிறதாம். 

ஆக்‌ஷன் சீக்குவன்ஸ்களில் புதுமையாக எதையாவது மேற்கொண்டாக வேண்டுமென்று விரும்புகிறார் லோகேஷ் கனகராஜ். அதனால், இளம் சண்டைக் கலைஞர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் சண்டை இயக்குநர்களாக தேசிய விருது வென்ற கலைஞர்களான அன்பறிவ் இரட்டையர்கள் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். ஆக்‌ஷன் படத்துக்கு பெயர் போன கே.ஜி.எஃப் படத்துக்கு சண்டை இயக்குநராக பணியாற்றியவர்கள் அன்பறிவ். லோகேஷின் முந்தைய படமான மாஸ்டரிலும் இவர்களே சண்டைக் கலைஞர்களாக பணியாற்றினார்கள்.

மாஸ்டரில் பணியாற்றும் போதே இவர்களின் மீது இம்ப்ஸ்ரெஸ் ஆகியிருக்கிறார் லோகேஷ். அதனால், இந்தப் படத்திலும் ஒப்பந்தம் செய்துவிட்டார் என்கிறார்கள். 2013ஆம் ஆண்டு இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் அன்பறிவ் சண்டை இயக்குநர்களாக அறிமுகமானார்கள். அதன் பின்பு மெட்ராஸ்,மாயா, கபாலி, இருமுகன், காஷ்மோரா, சத்ரியன், ஜூங்கா, கைதி, கே.ஜி.எஃப்.சேப்டர்-2, டாக்டர், அயலான்ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory