» சினிமா » திரை விமர்சனம்

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா விமர்சனம்!

சனி 16, நவம்பர் 2024 4:14:18 PM (IST)



கோவா காவல் துறைக்கு பிரான்சிஸ் சூர்யாவும், திஷா பதானியும் பணம் வாங்கிக் கொண்டு உதவி செய்கிறார்கள். அப்போது சூர்யாவிடம் ஒரு சிறுவன் தஞ்சமடைகிறான். அந்த சிறுவனை கடத்தி செல்ல ஒரு கும்பல் வருகிறது.

பிறகு கதை 1070-ம் ஆண்டுக்கு நகர்கிறது. அங்கு நெருப்பை தெய்வமாக வணங்கும் ஆதிக்குடியை சேர்ந்த கங்குவா என்ற சூர்யாவின் தீவை ரோமானிய குழு கைப்பற்ற நினைக்கிறது. அப்போது இன்னொரு தீவை சேர்ந்த உதிரன், சூர்யா வசிக்கும் தீவின் மீது போர் தொடுக்கிறான்.

எதிரிகளிடம் இருந்து தீவை சூர்யாவால் காப்பாற்ற முடிந்ததா? நிகழ்கால பிரான்சிஸ் சூர்யாவுக்கும், கங்குவா சூர்யாவுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன? சிறுனை கடத்த வந்த கும்பல் யார்? என்பது மீதி கதை.. கங்குவா, பிரான்சிஸ் என இரண்டு கெட்டப்களில் வருகிறார் சூர்யா. நிகழ்காலத்தில் ஸ்டைலிஷ் கெட்டப்பில் மிரட்டும் சூர்யா, பழங்குடி கெட்டப்பில் மாவீரனாக கெத்து காட்டுகிறார்.

நாயகி திஷா பதானி சில காட்சிகளில் வந்தாலும் கலகலப்பு. உதிரனாக வரும் பாபி தியோல் தோற்றத்திலும், நடிப்பிலும் வித்தியாசம் காண்பித்துள்ளார். சண்டை காட்சியில் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். நாலு காட்சிகள் என்றாலும் தன்னுடைய டிரேட் மார்க் நடிப்பைக் கொடுத்துள்ள நட்ராஜ் கேரக்டரை எளிதில் மறக்க முடியாது.

யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி ஆகிய இருவரும் கொஞ்ச நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்கள். கருணாஸ், போஸ் வெங்கட், கலைராணி, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், கயல் தேவராஜ், குணா, வசுந்தரா என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நிறைவு சேர்த்துள்ளனர். கிளைமாக்ஸ் காட்சியில் திடீர் வரவாக வரும் கார்த்தி ஆச்சர்யம் தருவதோடு அடுத்த பாகத்துக்கும் லீட் கொடுத்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் பிரமாதம். பின்னணி இசை படத்தை விறுவிறுப்பாக நகர்த்த உதவுகிறது. வெற்றியின் பிரமாண்டமான ஒளிப்பதிவு கதைக்களத்துக்கே அழைத்துச் செல்கிறது. இரு வேறு காலக்கட்ட கதையை சொல்வதில் உள்ள குழப்பத்தை தவிர்க்க திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மனிதம் போற்றுவோம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து பிரமாண்டத்துடன் வியக்க வைக்கும் அற்புதமான படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் சிவா.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory