» சினிமா » திரை விமர்சனம்

கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் திரை விமர்சனம்

செவ்வாய் 5, நவம்பர் 2024 7:51:37 PM (IST)



பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் நாயகன் கவின் அரண்மனை ஒன்றில் நடக்கும் அன்னதான நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லப்படுகிறார். அரண்மனையின் பிரமாண்டத்தை கண்டு சொக்கிபோகும் அவர் யாருக்கும் தெரியாமல் அங்கு ஒளிந்து கொள்கிறார்.

அப்போது அந்த வீட்டின் வாரிசுகள் இடையே சொத்துக்காக மோதல் நடக்கிறது. அதனை கவின் பார்த்து விடுகிறார். அரண்மனை குடும்பம் கவினை மிரட்டுகிறது. அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் வருகிறது.

இதனால் கவின் அரண்மனையிலிருந்து தப்பிக்க நினைக்கிறார். அந்த முயற்சியில் கவின் வெற்றி பெற்றாரா? அரண்மனை குடும்பம் ஏன் கவினை கொலை செய்ய துரத்துகிறது? என்பது மீதி கதை.

பிச்சைக்காரராக வித்தியாசமான தோற்றத்தில் வரும் கவின். நக்கல், நையாண்டி, அப்பாவித்தனம், கண்களில் தேங்கி நிற்கும் ஏக்கம் என அசத்தும்போதும் சரி, அரண்மனையில் அச்சத்தில் உறையும்போதும் சரி உடல் மொழியில் வித்தியாசம் காண்பித்து முழு படத்தையும் தாங்கி பிடிக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி வழக்கம்போல் கவுண்ட்டர் கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். சுனில் சுகதா, மாருதி பிரகாஷ்ராஜ், டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்‌ஷயா ஹரிஹரன், திவ்யா விக்ரம் உள்பட அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பை வழங்கி உள்ளனர்.

ஜென் மார்ட்டின் பின்னணி இசை கதையோடு பயணித்து படத்துக்குப் பலம் சேர்த்துள்ளது. மலரும் நினைவுகளாக வரும் பாடல்களும் சிறப்பு. அரண்மனையை பல கோணங்களில் படம் பிடித்த விதத்தில் பிரமிப்பை ஏற்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அழுத்தம் இல்லாதது குறை.

அடித்தட்டு நிலையில் உள்ள பிச்சைக்காரர்கள் மீது சமூகம் எத்தகைய அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது என்பதை டார்க் காமெடி பின்னணியில் சொல்ல நினைத்திருக்கும் இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் அந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory