» சினிமா » திரை விமர்சனம்

ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தின் விமர்சனம்

ஞாயிறு 3, நவம்பர் 2024 10:33:11 AM (IST)

சென்னையில் அப்பா, அம்மாவுடன் வசிக்கும் ஜெயம் ரவி சட்டம் பயிலும் மாணவர். எதிலும் நேர்மை வேண்டும் என்ற குணம் உள்ளவர் என்பதால் பின்விளைவுகளை ஆராயமால் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார். அதனால் படிப்பு பாதிக்கப்படுகிறது. அப்பாவின் கோபத்தையும் சம்பாதிக்கிறார். இந்த நிலையில் தம்பி ஜெயம் ரவியை நல்வழிப்படுத்துவதாக தந்தைக்கு வாக்குறுதி அளித்து ஊட்டிக்கு அழைத்து செல்கிறார் அக்கா பூமிகா.

அங்கும் ஜெயம் ரவியால் அக்கா குடும்பத்துக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதன் காரணமாக பூமிகாவின் குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது. கணவனின் வீட்டை விட்டு தம்பியுடன் வெளியேறுகிறார். தன்னால் பிரிந்த அக்கா குடும்பத்தை ஜெயம் ரவி எப்படி மீண்டும் ஒன்று சேர்க்கிறார்? என்பது மீதி கதை.

பொறுப்பு இல்லாத இளைஞன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக இருக்கிறார் ஜெயம் ரவி. ஆவேச காட்சிகளில் அசத்துவதுபோல் நகைச்சுவையிலும், எமோஷன் காட்சியிலும் நன்றாக ஸ்கோர் செய்கிறார். பிரியங்கா மோகன் அழகில் வசீகரிக்கிறார். நடிப்பும் சிறப்பு. அன்புள்ள அக்காவாக வரும் பூமிகா தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து உடல் மொழியாலும், பாச மழையாலும் கவனிக்க வைக்கிறார்.

பூமிகாவின் கணவராக வரும் நட்டி நட்ராஜ் அனுபவ நடிப்பின் மூலம் திறமையான நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். விடிவி கணேஷ் காமெடி சிரிக்க வைக்கிறது. சரண்யா பொன்வண்ணன், சீதா, எம்.எஸ்.பாஸ்கர், ராவ் ரமேஷ், அச்யுத் குமார் உள்பட அனைவரும் தேர்ந்த நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மக்காமிஷி பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் கதையை இலகுவாக நகர்த்த உதவுகிறது.

ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம் ஊட்டி அழகை பல கோணங்களில் படம் பிடித்து கண்களுக்கு விருந்து படைத்துள்ளார். பாடல் காட்சிகளை உயர்தரத்தில் படமாக்கிய விதம் அருமை. முதல் பாதியில் பொறுப்பில்லாமல் வரும் ஜெயம் ரவி இரண்டாம் பாதியில் திடீரென்று குணம் மாறுவது நெருடல். காமெடி, காதல், சென்டிமென்ட், அக்கா-தம்பி பாசத்துடன் கவலைகளை மறந்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் ராஜேஷ்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory