» சினிமா » திரை விமர்சனம்

18-ம் நூற்றாண்டில் நடக்கும் கதை.. தங்கலான் விமர்சனம்!

சனி 17, ஆகஸ்ட் 2024 12:51:29 PM (IST)



வட ஆற்காடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மனைவி பார்வதி மற்றும் குழந்தைகளுடன் வசிக்கும் பூர்வக்குடியை சேர்ந்த விக்ரம், தனது குழுவினருடன் விவசாயம் செய்து பிழைப்பு நடத்துகிறார். அவர்களின் நிலம் ஜமீன்தாரின் சூழ்ச்சியால் அபகரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கோலர் பகுதியில் தங்கம் இருப்பதை அறியும் கிளெமென்ட் என்ற வெள்ளைக்காரர், விக்ரமையும் அவரது குழுவினரையும் அணுகி தங்கத்தை எடுத்து தந்தால் அதில் பங்கு தருவதாக உறுதி அளிக்கிறார். அதை ஏற்கும் விக்ரம் தனது கூட்டத்தில் உள்ள சிலரை அழைத்துக் கொண்டு வெள்ளைக்காரர்களுடன் பறப்படுகிறார். வழியில் அவர்களுக்கு ஏற்படும் தடங்கல்களும் அதை மீறி தங்கத்தை எடுக்க முடிந்ததா? என்பதும் மீதி கதை.

பழங்குடி இனத்தவராக வரும் விக்ரம், இப்படியும் நடிக்க முடியுமா என்று வியக்கும் வகையில் கதாபாத்திரத்தில் அபார உழைப்பை கொடுத்து மகா கலைஞனாக வாழ்ந்து இருக்கிறார். சண்டை காட்சிகளில் பாய்ச்சல் காட்டுகிறார். புலியுடன் மோதுவதில் மிரட்சி. நடை, உடை, பாவனை என்று அத்தனையிலும் இதுவரை பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் உடலை வருத்தி விருதுக்குரிய நடிப்பை வழங்கி இருக்கிறார்.விக்ரம் மனைவியாக வரும் பார்வதி ரவிக்கை அணியாத பழங்குடி பெண் வேடத்தில் யதார்த்தமான நடிப்பை அள்ளி கொட்டி இருக்கிறார். காதல் காட்சிகளிலும் அரிதாரம் பூசாத அழகு காட்டுகிறார்.

சூனியக்காரியாக திகிலூட்டுகிறார் மாளவிகா மோகனன்.. சுற்றி சுழன்று சண்டை போட்டு ஹாலிவுட் அதிரடி ஹீரோயின்களுக்கு சவால் விட்டு இருக்கிறார். விக்ரமுடன் அவர் மோதும் காட்சி மிரள வைக்கிறது. பசுபதி அனுபவ நடிப்பை வழங்கி இருக்கிறார். வெள்ளைக்காரராக வரும் டேனியல் கொல்டாஜிரோனின் இன்னொரு முகம் அதிர வைக்கிறது. ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களில் உயிர்ப்பு. கதையோடு பயணிக்கும் பின்னணி இசையும் போர்முரசமாய் ஒலித்து படத்தை தூக்கி நிறுத்துகிறது.

கிஷோர் குமாரின் கேமரா பழங்குடி மக்களின் வறட்சியான நிலம், தங்க வயல் என்று அந்த காலத்துக்கே அழைத்து சென்று கண்களுக்கு விருந்து படைக்கிறது. பிற்பகுதியில் சில காட்சிகள் அழுத்தம் இல்லாமல் நகர்ந்து போவது பலகீனம். பூர்வக்குடி மக்கள் மீதான அடக்குமுறை. நிலம் மீதான அரசியல் போன்றவற்றை வரலாற்று பின்னணியில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தி தரமான படைப்பாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education




Thoothukudi Business Directory