» சினிமா » திரை விமர்சனம்

யோகிபாபு நடித்துள்ள போட் திரைவிமர்சனம்!

திங்கள் 5, ஆகஸ்ட் 2024 11:54:17 AM (IST)



1943-ல் நடக்கும் கதை. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் விமானங்கள் சென்னையில் குண்டுகளை வீசப்போவதாக தகவல் வர யோகிபாபு தனது பாட்டியுடன் படகில் ஏறி கடலுக்குள் தப்பி செல்கிறார்.

அவர்களுடன் சின்னி ஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், கவுரி கிஷன் உள்ளிட்ட மேலும் சிலர் பயணிக்கின்றனர். பயங்கரவாதியும் படகில் இருப்பது தெரிய வருகிறது. நடுக்கடலில் ஒரு வெள்ளைக்காரரும் படகில் தஞ்சமடைகிறார்.

அப்போது படகில் ஓட்டை விழுந்து நின்றுவிடுகிறது. இதனால் படகில் இருப்போரில் ஓரிருவரை வெளியேற்ற வேண்டிய நிர்பந்தம் வருகிறது. படகை சுற்றி ஒரு சுறாமீன் பசியோடு வந்து கொண்டிருக்கிறது.படகில் இருந்தவர்களால் பத்திரமாக கரை சேர முடிந்ததா? என்பதற்கு விடை சொல்கிறது மீதி கதை.

கதையின் நாயகனாக, முழு பொறுப்பையும் தோளில் சுமந்துள்ளார் யோகிபாபு. அவரது டைமிங் காமெடியும், எதார்த்தமான பேச்சும் ரசிக்க வைக்கிறது. பூர்வகுடி மக்களின் பெருமை பேசும் இடங்களில் கைதட்டல்களை அள்ளுகிறார்.

கதாநாயகியாக கவுரி கிஷன் அலட்டாத நடிப்பால் அலங்கரிக்கிறார். சின்னி ஜெயந்த் அனுபவ நடிப்பை கதாபாத்திரத்தில் நிறைவாக வழங்கி படத்துக்கு பலம் சேர்த்துள்ளார். சமூக கருத்து பேசும் எம்.எஸ்.பாஸ்கர் வசனங்கள் சிந்திக்க வைக்கின்றன. அவரது இன்னொரு முகம் திருப்பம். யோகிபாபுவின் பாட்டியாக வரும் குலப்புள்ளி லீலாவும் கவனம் ஈர்க்கிறார்.

மதுமிதா, ஷாரா, சாம்ஸ், அக்‌ஷத் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நிறைவு சேர்க்கிறார்கள். பிரிட்டிஷ் அதிகாரியாக வரும் ஜெஸ்ஸியின் வில்லத்தனமான நடிப்பு ரசிக்க வைக்கிறது.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் கடலின் பிரமாண்டமும், சுறாவின் ஆக்ரோஷமும் வியக்க வைக்கிறது. ஜிப்ரானின் இசை படத்துடன் ஒன்ற செய்கிறது. ஆங்காங்கே நாடகத்தனம் தென்பட்டாலும், பரபரப்பான காட்சிகள் அதை மறக்க செய்கின்றன.

கடலுக்கு உள்ளேயே முழு படத்தை எடுத்து, அதில் அப்போதைய அரசியலையும், நவீன அரசியலையும் சாடி, தனக்கே உரிய நையாண்டி மற்றும் நகைச்சுவை உணர்வுடன், ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்து கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் சிம்புதேவன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education





Thoothukudi Business Directory