» சினிமா » திரை விமர்சனம்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் விமர்சனம்

புதன் 3, பிப்ரவரி 2021 11:56:52 AM (IST)



நடிப்பு - விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்
இயக்கம் - லோகேஷ் கனகராஜ்
இசை - அனிருத்
வெளியான தேதி - 13 ஜனவரி 2021
நேரம் - 2 மணி நேரம் 58 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

வில்லன் பவானி(விஜய் சேதுபதி) பற்றிய அறிமுகத்தோடு படத்தை துவங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதிகாரமிக்கவர்கள் பவானியின் குடும்பத்தாரை கொலை செய்துவிட்டு, டீனேஜரான அவரை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவிடுகிறார்கள். அங்கு பவானி ஈவு இரக்கமில்லாத கொடூரனாக மாறிவிடுகிறார்.

ஒரு காட்சியில் பவானிக்கு கொம்பு இருப்பது போன்று காட்டியுள்ளார் லோகேஷ். தன்னை உருவாக்கிய இடத்தை வைத்தே தன் கிரிமினல் சாம்ராஜ்ஜியத்தை பெரிதாக்க முயற்சி செய்கிறார் பவானி. அவர் சீர்திருத்த பள்ளியில் இருக்கும் சிறார்களை பயன்படுத்துகிறார். பவானி எத்தகையவர் என்று சொல்லி முடித்ததும் ஜேடி(விஜய்) வருகிறார். இந்த பவானியை அடக்கி, சிறுவர்களை காப்பாற்ற யாராவது தைரியமான ஆள் வர மாட்டாரா என்று நினைக்கும்போது ஜேடி வருகிறார்.

சென்னையில் இருக்கும் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை செய்கிறார் ஜேடி. பாக்கெட்டில் மது பிளாஸ்குடன் சுற்றும் பேராசிரியர். எப்பொழுது வேண்டுமானாலும் அட்வைஸ் சொல்வார், அடிக்க தயாராக இருப்பார். மாணவர்கள் ஜேடியை கொண்டாடுகிறார்கள். ஆனால் கல்லூரி நிர்வாகமோ அவரை விரட்டப் பார்க்கிறது. சந்தர்ப்ப சுழலால் சிறார் சீர்த்திருத்த பள்ளியில் வேலைக்கு செல்கிறார் ஜேடி. பவானியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளி அது.

மாணவர்களின் நலன் தான் முக்கியம் என்று நினைக்கும் ஜேடி, அவர்களை தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்தும் குற்றவாளியை எதிர்கொள்வாரா? மாஸ்டர், லோகேஷ் கனகராஜ் படம் என்பதை விட விஜய் படமாக இருந்தாலும் மாஸ் ஹீரோவை வைத்து கமர்ஷியல் படம் கொடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர். விஜய்யின் முந்தைய ஹிட் படங்களின் ரெஃபரன்ஸ் பொருத்தமாக உள்ளது. சீர்திருத்த பள்ளிக்குள கபடி ஆடும் இடத்தை பார்த்ததும் கில்லி படம் தான் நினைவுக்கு வருகிறது.

படத்தின் சில காட்சிகள் மிகவும் பரிட்சயமாக உள்ளது. லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களுடன் ஒப்பிடும் போது மாஸ்டரில் ஆக்ஷன் காட்சிகள் ரொம்பவே நீளம். அதிலும் குறிப்பாக ஜேடியும், அவருடன் சேர்ந்து படித்த வானதியும்(ஆண்ட்ரியா) அம்பு விடும் காட்சியில் சுவாரஸ்யமே இல்லை. ஜேடி வரும் கல்லூரி காட்சிகள் நீளமாக உள்ளது. நிறைய சப்போர்டிங் கதாபாத்திரங்கள் இருந்தாலும் பலனில்லை.

விஜய், விஜய் சேதுபதியின் நடிப்பு தான் படத்தை தாங்கிப் பிடிக்கிறது. விஜய்யின் டான்ஸ் அருமை. விஜய் அறிவுரை சொல்லும் காட்சிகள் கடுப்பேற்றவில்லை. விஜய் சேதுபதி ரசிகர்களை கவர்கிறார். அவரின் எதார்த்த நடிப்பு பவானியின் கொடூர குணத்தை மேம்படுத்திக் காட்டுகிறது. ஜேடியும், பவானியும் இறுதியாக மோதும் காட்சிகள் பிளஸ் பாயிண்ட்.

மாஸ்டர் மாஸ், பிளாக்பஸ்டர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory