» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பெனால்டி ஷூட்-அவுட்: ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே அதிரடி வெற்றி!
செவ்வாய் 30, ஜூன் 2026 12:18:39 PM (IST)

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ரவுண்ட் ஆஃப் 32' சுற்றில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், பெனால்டி ஷூட்-அவுட் முறையில் ஜெர்மனியை 3–4 என்ற கணக்கில் வீழ்த்தி பராகுவே அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
போஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் கணக்கைத் தொடங்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற முதல் பாதியின் 42-ஆம் நிமிடத்தில், பராகுவே அணியின் மத்யாஸ் கலார்ஸா வழங்கிய 'அசிஸ்ட்' (Assist) மூலம் ஜூலியோ என்கிசோ முதல் கோல் அடித்தார். இதனால் பராகுவே அணி 0-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் வியூகங்களை மாற்றி வீரர்களை மாற்றும் படலத்தைத் தீவிரப்படுத்தின. ஆட்டத்தை மீட்கப் போராடிய ஜெர்மனி அணியில், ப்ளோரியன் விர்ட்ஸ் கொடுத்த பந்தைக் கொண்டு கை ஹவெர்ட்ஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தது. இதன் பிறகு ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளாலும் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் வழங்கப்பட்ட கூடுதல் நேர முடிவிலும் இரு அணிகளும் 1-1 என்றே நீடித்தன.
வெற்றியாளரைத் தீர்மானிக்கப் பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் முதலில் ஷூட் செய்த ஜெர்மனி அணி கோல் அடிக்கத் தவறியது. இதனைப் பயன்படுத்திய பராகுவே அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. அடுத்த இரண்டு வாய்ப்புகளிலும் இரு அணிகளும் கோல் அடித்தன. நான்காவது வாய்ப்பில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறின. இறுதி வாய்ப்புகளின் முடிவில் ஜெர்மனிக்கு எதிராகப் பராகுவே அணி 3–4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கார்டிப் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி : தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
வெள்ளி 17, ஜூலை 2026 12:00:27 PM (IST)

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைப்பில் மாற்றம்: ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் முடிவு!
வியாழன் 16, ஜூலை 2026 4:37:54 PM (IST)

பிரான்ஸை 2-0 கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின்: உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி!
புதன் 15, ஜூலை 2026 12:46:04 PM (IST)

அக்ஷர் அசத்தல்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி!
புதன் 15, ஜூலை 2026 8:53:59 AM (IST)

18 ஆண்டுகால பயணம் முடிவு: சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகல்!
திங்கள் 13, ஜூலை 2026 12:26:07 PM (IST)

உலகக் கோப்பையில் ஸ்பெயின் வரலாற்றுச் சாதனை : பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது!
சனி 11, ஜூலை 2026 12:29:27 PM (IST)








