» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மாநில சீனியர் ஆண்கள் ஆக்கி போட்டி: நெல்லை, தூத்துக்குடி உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி
செவ்வாய் 12, மே 2026 8:07:02 AM (IST)
கோவில்பட்டியில் நடந்து வரும் மாநில சீனியர் ஆக்கி போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, சென்னை, கோயம்புத்தூர், அரியலூர், விருதுநகர், தஞ்சாவூர், மதுரை ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
தூத்துக்குடி ஆக்கி கழகம் சார்பில் வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான மாநில சீனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் கடந்த 9-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 32 மாவட்ட அணிகள் கலந்து கொண்டுள்ளன. முதலில் லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. 3-வது நாளான நேற்று திருப்பூர் மாவட்ட அணியை விருதுநகர் மாவட்ட அணி 4 - 1 என்ற கோல் கணக்கிலும், திருவாரூர் அணியை சிவகங்கை அணி 3 - 0 என்ற கோல் கணக்கிலும், புதுக்கோட்டை அணியை நீலகிரி அணி 7 - 0 என்ற கோல் கணக்கிலும், தேனி அணியை தஞ்சாவூர் அணி 8 - 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றன.
ராணிப்பேட்டை அணியை கோயம்புத்தூர் அணி 2 - 0 என்ற கோல் கணக்கிலும், திருவள்ளூர் அணியை திருவாரூர் அணி 1 - 0 என்ற கோல் கணக்கிலும், தென்காசி அணியை ராமநாதபுரம் அணி 14 - 0 என்ற கோல் கணக்கிலும், திருவண்ணாமலை அணியை அரியலூர் அணி 4 - 0 என்ற கோல் கணக்கிலும், திருவள்ளூர் அணியை மதுரை அணி 4 - 0 என்ற கோல் கணக்கிலும், தர்மபுரி அணியை சென்னை அணி 2 - 1 என்ற கோல் கணக்கிலும்,
கரூர் அணியை திருநெல்வேலி அணி 4 - 0 என்ற கோல் கணக்கிலும், காஞ்சிபுரம் அணியை கன்னியாகுமரி அணி 6 - 1 என்ற கோல் கணக்கிலும், சேலம் அணியை திருச்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கிலும், திண்டுக்கல் அணியை விழுப்புரம் அணி 4 - 0 என்ற கோல் கணக்கிலும், வேலூர் அணியை நாமக்கல் அணி 4 - 3 என்ற கோல் கணக்கிலும், செங்கல்பட்டு அணியை தூத்துக்குடி அணி 3 - 1 என்ற கோல் கணக்கிலும், கன்னியாகுமரி அணியை தர்மபுரி அணி 1 - 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றன. இதே போல், கிருஷ்ணகிரி அணியுடன் திருப்பூர் அணி மோதிய போட்டியில் 2 - 2 என்ற கோல் கணக்கில் சமன் நிலையை பெற்றது.
காலிறுதி ஆட்டங்கள் :
முதல் போட்டி: சென்னை vs கோயம்புத்தூர்
2-வது போட்டி: திருநெல்வேலி vs தூத்துக்குடி
3-வது போட்டி: விருதுநகர் vs தஞ்சாவூர்
4-வது போட்டி: மதுரை vs அரியலூர்
நாளை (புதன்கிழமை) காலையில் அரையிறுதி போட்டிகளும், மாலையில் இறுதி போட்டிகளும் நடைபெறுகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : கோலி உள்ளே... ஜெய்ஸ்வால் வெளியே!!
திங்கள் 22, ஜூன் 2026 11:10:22 AM (IST)

போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கோ: நடுகளத்தில் மிரட்டிய சாமுவேல் முத்துசாமி!
வெள்ளி 19, ஜூன் 2026 12:00:29 PM (IST)

உலகக் கோப்பையில் தமிழ் வம்சாவளி வீரர்: காங்கோ அணிக்காகக் களம் கண்ட சாமுவேல் முத்துசாமி!
வியாழன் 18, ஜூன் 2026 12:04:10 PM (IST)

மகளிர் டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
வியாழன் 18, ஜூன் 2026 11:31:58 AM (IST)

கில், இஷான் கிஷன் சதம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
வியாழன் 18, ஜூன் 2026 8:32:03 AM (IST)

உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயினுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கேப் வெர்டே!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:44:52 PM (IST)








