» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
திலக் வர்மா சதம், அஸ்வனி அசத்தல் பந்துவீச்சு : வெற்றிப் பாதைக்கு திரும்பியது மும்பை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:17:26 PM (IST)

ஐபிஎல் தொடரின் 30-ஆவது லீக் ஆட்டத்தில், குஜராத் அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இண்டியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. தொடர் தோல்விகளுக்குப் பின் கிடைத்துள்ள இந்த வெற்றியால் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முன்னேறியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. ஆரம்பத்தில் ககிசோ ரபாடாவின் வேகத்தில் குவின்டன் டி காக் (13), அறிமுக வீரர் டேனிஷ் (2) மற்றும் சூர்யகுமார் யாதவ் (15) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த மும்பையை, நமன் திர் - திலக் வர்மா கூட்டணி மீட்டெடுத்தது.
நமன் திர் 45 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் திலக் வர்மா ருத்ரதாண்டவம் ஆடினார். அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 45 பந்துகளில் 101 ரன்கள் (8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 15 ரன்கள் சேர்த்தார். குஜராத் தரப்பில் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 200 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி, மும்பையின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 15.5 ஓவர்களில் 100 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 26 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷுப்மன் கில் (14), ஷாருக் கான் (17) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். சாய் சுதர்சன் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
மும்பை தரப்பில் அஸ்வனி குமார் அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். கசான்ஃபர் மற்றும் மிட்செல் சேன்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் மும்பை இண்டியன்ஸ் அணி தனது தோல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, புத்துயிர் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : கோலி உள்ளே... ஜெய்ஸ்வால் வெளியே!!
திங்கள் 22, ஜூன் 2026 11:10:22 AM (IST)

போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கோ: நடுகளத்தில் மிரட்டிய சாமுவேல் முத்துசாமி!
வெள்ளி 19, ஜூன் 2026 12:00:29 PM (IST)

உலகக் கோப்பையில் தமிழ் வம்சாவளி வீரர்: காங்கோ அணிக்காகக் களம் கண்ட சாமுவேல் முத்துசாமி!
வியாழன் 18, ஜூன் 2026 12:04:10 PM (IST)

மகளிர் டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
வியாழன் 18, ஜூன் 2026 11:31:58 AM (IST)

கில், இஷான் கிஷன் சதம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
வியாழன் 18, ஜூன் 2026 8:32:03 AM (IST)

உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயினுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கேப் வெர்டே!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:44:52 PM (IST)








