» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மண்டல அளவிலான மின்னொளி கால்பந்து போட்டி: காயல்பட்டினம் எல்.கே. பள்ளி முதலிடம்
திங்கள் 20, ஏப்ரல் 2026 10:20:55 AM (IST)

நாசரேத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான மின்னொளி கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள பசுமைப் புல்வெளி மைதானத்தில் 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட இப்போட்டியில் மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 30 அணிகள் பங்கேற்றன. இதில் ஆண்களுக்கான 19 வயதிற்குட்பட்ட பிரிவில் 13 அணிகளும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 11 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளின் இறுதியில், 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் விக்ரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யு.ஏ. மேல்நிலைப்பள்ளியும் வெற்றி பெற்றன. அதேபோல் பெண்கள் பிரிவில் அம்பாசமுத்திரம் கேம்பிரிட்ஜ் பள்ளி முதலிடத்தைப் பிடித்தது.
போட்டியின் நிறைவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பிள்ளையன்மனை சேகர குருவானவர் செல்வின்ராஜ் சார்லஸ் ஆரம்ப ஜெபம் செய்ய, கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கல்லூரி தாளாளரும், தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினருமான 'ஐடியல் குரூப்ஸ்' தொழிலதிபர் அருள்ராஜா சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்தார்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ₹15,000 மற்றும் வெற்றிக் கோப்பையும், இரண்டாம் பரிசாக ₹10,000 மற்றும் வெற்றிக் கோப்பையும், மூன்றாம் பரிசாக ₹5,000 மற்றும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.
விழாவில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல உபதலைவர் மோசஸ் ஜெபராஜ், குருத்துவச் செயலர் தாமஸ், பொருளாளர் ஜான்சன் டேவிட் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் கலந்துகொண்டு வீரர்களுக்குப் பரிசுகளை வழங்கினர். சுற்றுச்சூழல் கரிசனைத்துறை இயக்குநர் ஜான் சாமுவேல், செயற்குழு உறுப்பினர்கள் மாமல்லன், சுதாகர், ஸ்டீபன், எட்வர்ட், முனைவர் கரோலின், ஆர்ச்சிபால் ஜான்சன், மோகன்சிங் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் விழாவில் சிறப்பித்தனர்.
இவர்களுடன் உடன்குடி மற்றும் நாசரேத் பகுதிகளைச் சேர்ந்த சபை மன்ற உறுப்பினர்கள், முன்னாள் கால்பந்து வீரர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவ-மாணவியர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் ஜான் வெலிங்டன், ஜெசிந் பிரிவின் மற்றும் அருண் ஆகியோர் தொகுத்து வழங்க, உடற்கல்வி இயக்குநர் விமல் சுதாகர் மற்றும் கல்லூரிப் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியைச் சிதறடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்: சஞ்சு சாம்சன் அதிரடியில் அபார வெற்றி!
புதன் 6, மே 2026 10:25:41 AM (IST)

வான்கடேவில் சாதனை சேஸிங்: ரோஹித் - ரிக்கிள்டன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
செவ்வாய் 5, மே 2026 12:07:12 PM (IST)

மும்பையை வீழ்த்தி சென்னை அபார வெற்றி: ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!
ஞாயிறு 3, மே 2026 1:42:39 PM (IST)

மகளிர் டி20 உலகக்கோப்பை : இந்திய அணி அறிவிப்பு
சனி 2, மே 2026 5:47:25 PM (IST)

இந்திய இன்டோர் ஓபன் தடகளப் போட்டி: தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் பங்கேற்பு
சனி 2, மே 2026 11:52:50 AM (IST)

ஐபிஎல் விதிமுறை மீறல்: ராஜஸ்தான் இளம் வீரரிடம் ஆக்ரோஷம் காட்டிய ஜேமிசனுக்கு அபராதம்!
சனி 2, மே 2026 11:49:03 AM (IST)










