» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்து தொடரில் அதிக சதங்கள் : இந்திய பேட்ஸ்மேன்கள்அசத்தல்..!

சனி 2, ஆகஸ்ட் 2025 8:21:30 PM (IST)



இங்கிலாந்து தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் 12 சதங்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளனர். 

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் 12 சதங்கள் விளாசியுள்ளனர். அத்துடன் ஒரே தொடரில் அதிக சதங்கள் அடித்த தொடராக இந்த இங்கிலாந்து தொடர் அமைந்துள்ளது. சுப்மன் கில் 4 சதங்கள் அடித்துள்ளார். கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர். ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்ததர் தலா ஒரு சதம் அடித்துள்ளனர். 

ஆண்டர்சன்-தெண்டுல்கர் கோப்பைக்கான இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தரப்பில் இதுவரை 12 சதங்கள் பதிவாகி உள்ளது. இதன் மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதம் அடித்திருந்த அணிகளான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்காவின் (தலா 12 சதங்கள்) சாதனையை சமன் செய்தது.

சாதனையை தவற விட்ட கில்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது இன்னிங்சில் 11 ரன்னில் ஆட்டமிழந்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இந்த தொடரில் மொத்தம் 754 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன்கள் பட்டியலில் இங்கிலாந்தின் கிரகாம் கூச்சை (752 ரன்கள், 1990-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான தொடரில்) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறினார். 

இந்த வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டான் பிராட்மேன் 810 ரன்களுடன் (1936-ம் அண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில்) முதலிடத்தில் நீடிக்கிறார். சுப்மன் கில் மேலும் 21 ரன்கள் எடுத்து இருந்தால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கவாஸ்கரிடம் (774 ரன்கள், 1971-ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக) இருந்து தட்டிப்பறித்து இருக்கலாம். ஆனால் அவர் அந்த அரிய வாய்ப்பை கோட்டை விட்டார்.

3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால்-ஆகாஷ் தீப் இணை 107 ரன்கள் திரட்டியது. இது நடப்பு தொடரில் 18-வது செஞ்சுரி பார்ட்னர்ஷிப்பாகும். 2000-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு டெஸ்ட் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச செஞ்சுரி பார்ட்னர்ஷிப் இதுவாகும். முன்னதாக 2003-04-ம் ஆண்டில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் தொடரில் 17 முறை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் கண்டதே அதிகபட்சமாக இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory