» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐபிஎல் 2025 முதல் டி20 போட்டி: கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ஞாயிறு 23, மார்ச் 2025 10:07:48 AM (IST)

ஐபிஎல் 18வது தொடரின் முதல் போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிராக ஆடிய பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நாடு முழுவதும் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 18வது தொடர், கொல்கத்தாவில் நேற்று விமரிசையாக துவங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான குவின்டன் டிகாக் 5 பந்துகளை சந்தித்து 4 ரன் மட்டுமே எடுத்து ஹேசல்வுட் பந்தில் அவுட்டானார்.
இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் சுனில் நரைனும், அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் அஜிங்கிய ரஹானேவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி அபாரமாக ஆடி பெங்களூரு பவுலர்களின் பந்துகளை துவம்சம் செய்து 55 பந்துகளில் 103 ரன் குவித்தது. 10வது ஒவர் முடிவில் அணியின் ஸ்கோர் 107 ஆக இருந்தபோது, சுனில் நரைன் (44 ரன், 3 சிக்சர், 5 பவுண்டரி), ரஷிக் சலாம் பந்தில் அவுட்டானார்.
அடுத்த சில பந்துகளில் ரஹானேவும் 56 (4 சிக்சர், 6 பவுண்டரிகள்) ரன்னில் க்ருணால் பாண்ட்யா பந்தில் அவுட்டானார். 13வது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்னில் வீழ்ந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் கொல்கத்தா அணியின் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. பின்னர் களமிறங்கிய ரிங்கு சிங் 12, ஆண்ட்ரே ரசல் 4, அங்கிரிஷ் ரகுவன்ஷி 30, ஹர்ஷித் ராணா 6 ரன்னில் அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா, 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்தது.
பெங்களூரு தரப்பில், க்ருணால் பாண்ட்யா 3, ஜோஷ் ஹேசல்வுட் 2, யாஷ் தயாள், ரஷிக் சலாம், சுயாஷ் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணிக்கு, தொடக்க வீரர்கள் விராட் கோலி பிலிப் சால்ட் இணை ராக்கெட் வேக தொடக்கத்தை கொடுத்தது.
ஒவ்வொரு ஓவர்களிலும் பவுண்டரிகள் பறந்ததால் பெங்களூரு அணி ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது. 31 பந்துகளை எதிர்கொண்ட பில் சால்ட் 2 சிக்சர், 9 பவுண்டரியுடன் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல், 10 ரன்களில் வெளியேற 16 பந்துகளில் கேப்டன் ரஜத் பட்டிதார் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 16.2 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 177 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி 59 ரன்களும், லிவிங்ஸ்டோன் 15 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த அதிரடி வீரர்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:08:34 PM (IST)

ஐபிஎல்லில் மேட்ச் பிக்சிங்..? வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:35:40 PM (IST)

கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!
புதன் 16, ஏப்ரல் 2025 12:36:11 PM (IST)

ஐசிசி கமிட்டி தலைவராக கங்குலி மீண்டும் நியமனம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:32:06 PM (IST)

இனி பேட் அளவு கண்காணிக்கப்படும் : பிசிசிஐ அறிவிப்பு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 4:20:47 PM (IST)

லக்னோ அணியை வீழ்த்தியது சென்னை :தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:27:09 AM (IST)
