» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆர்சிபி அணியை ரஜத் படிதார் சிறப்பாக வழி நடத்துவார்: விராட் கோலி நம்பிக்கை

புதன் 19, மார்ச் 2025 4:51:45 PM (IST)



ஆர்சிபி அணியை புதிய கேப்டன் ரஜத் படிதார் பல ஆண்டுகளுக்கு சிறப்பாக வழி நடத்துவார் என  விராட் கோலி நம்பிக்கை தெரிவித்தார்.

18வது சீசன் ஐபிஎல் தொடருக்கான 10அணிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய கேப்டனை அறிமுகப்படுத்தி விராட் கோலி பேசியதாவது: ”ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக வரப் போகிறவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த அணியை வழி நடத்துவார். எனவே உங்களின் அன்பை வழக்கம் போல் ரஜத் படிதாருக்கு கொடுங்கள். ரஜத் ஒரு பிரமாதமான திறமை உடைய வீரர்.

ரஜத்துக்கு மிகப்பெரிய பொறுப்பு தற்போது காத்திருக்கிறது. அதை ரஜத் சிறப்பாக செய்வார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த சிறப்பான அணியை அவர் முன்னோக்கி அழைத்துச் செல்வார். ஒரு வெற்றிகரமான கேப்டனாக என்ன வேண்டுமோ அது அனைத்தும் ரஜத்திடம் இருக்கிறது. இம்முறை எங்கள் அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். சில வீரர்களை நினைக்கும்போது என்னுடைய எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. 

பல திறமையான வீரர்கள் அணியில் இருப்பதால் அவர்களுடன் இணைந்து விளையாட நான் ஆர்வமாக இருக்கின்றேன். அணியின் வெற்றிக்கு கண்டிப்பாக உதவுவேன். பல ஆண்டுகளாக நான் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டேனோ, அதேபோல் இம்முறையும் செயல்படுவேன். பெங்களூரில் வந்து விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த அழகான நகரத்துக்கு திரும்பி வந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். உங்களை பார்க்கும் போது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இங்கு நான் 18 ஆண்டுகளாக வந்து விளையாடுகிறேன். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று கூறி கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து பேசிய கேப்டன் ரஜத் படிதார் ”தான் சிறுவயதிலேயே கோலி, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் விளையாடுவதை பார்த்து வளர்ந்தவன். நான் இன்று அந்த அணிக்கு தலைமை தாங்குவதற்கு மகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த அணி இது” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education

New Shape Tailors







Thoothukudi Business Directory