» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக செஸ் தரவரிசை பட்டியல் 3ம் இடம் பிடித்து குகேஷ் அசத்தல்: ஜூனியர் பிரிவில் முதலிடம்!

திங்கள் 3, மார்ச் 2025 12:37:08 PM (IST)



உலக செஸ் தரவரிசைப் பட்டியலில் ஸ்டேண்டர்ட் பிரிவில் இந்தியாவின் குகேஷ் 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

ஜூனியர் பிரிவில் குகேஷ் முதலிடத்தையும், பிரக்ஞானந்தா 2வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். செஸ் வீரர்களுக்கான ஃபிடே புதிய தரவரிசைப்பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் ஸ்டேண்டர்ட் பிரிவில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 2833 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுரா 2802 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். இந்திய வீரர், தமிழகத்தின் குகேஷ் 2787 புள்ளிகள் பெற்று 3ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். தவிர, அமெரிக்காவின் பேபியானோ கரவுனா 4, இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 5, உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துஸட்டோரோ 6, சீன வீரர் யி வெ 7வது இடங்களில் உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 2758 புள்ளிகளுடன் 8ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

ஸ்டேண்டர்ட் ஜூனியர் பிரிவில் தமிழக வீரர்கள் குகேஷ் முதலிடத்தையும், பிரக்ஞானந்தா 2வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர். இப்பிரிவில் இந்தியாவின் சாத்வனி ரவுனக் 5ம் இடத்தில் உள்ளார். மகளிர் ஸ்டேண்டர்ட் பிரிவில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி 5ம் இடத்தை பிடித்துள்ளார். இதில் சீன வீராங்கனை ஹு யிபான் முதலிடத்தில் உள்ளார். ரேபிட் செஸ் ஜூனியர் பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 2684 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இதில் குகேஷ் 2654 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors





CSC Computer Education





Thoothukudi Business Directory