» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : ரோகித் சர்மா புதிய சாதனை!

திங்கள் 10, பிப்ரவரி 2025 4:28:52 PM (IST)



ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளி ரோகித் 2-வது இடத்தை பிடித்தார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நேற்று பகல் இரவு போட்டியாக நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5 ஓவர்களில் 304 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார், சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய அவர் 76 பந்துகளில் சத்தை நிறைவு செய்தார். 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 7 சிக்சர்கள் உள்பட 119 ரன்கள் குவித்தார்.

வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. முதல் போட்டியில் இங்கிலாந்து ஏற்கனவே வெற்றி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா அடித்த 7 சிக்சர்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சிக்சர் எண்ணிக்கை 338-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் நொறுக்கியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்லை (331 சிக்சர்) பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி 351 சிக்சருடன் முதலிடம் வகிக்கிறார். ரோகித் இதே பார்மை தொடர்ந்தால் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிக்கவும் வாய்ப்புள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education

New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory