» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா உலக சாதனை!
திங்கள் 27, ஜனவரி 2025 12:55:31 PM (IST)

டி20 கிரிக்கெட்டில் கடைசி 4 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 318 ரன்கள் எடுத்து திலக் வர்மா உலக சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பட்லர் 45 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அக்சர் மற்றும் வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ரையிறுதிக்கு தகுதி
இதனையடுத்து 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
திலக் வர்மா இந்த ஆட்டத்தில் அடித்த 72 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி 4 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 318 ரன்கள் (107, 120, 19 மற்றும் 72 ரன்கள்) அடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு அவுட்டுகளுக்கு மத்தியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
சாதனை வீரர்கள் பட்டியல்
1. திலக் வர்மா - 318 ரன்கள்
2. மார்க் சாப்மேன் - 271 ரன்கள்
3. ஆரோன் பின்ச்/ஸ்ரேயாஸ் ஐயர் - 240 ரன்கள்
4. டேவிட் வார்னர் - 239 ரன்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










