» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கபடி போட்டி : முத்தையாபுரம் அணி முதல் இடம்!

செவ்வாய் 21, ஜனவரி 2025 10:58:29 AM (IST)



சாத்தான்குளம் அருகே நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முத்தையாபுரம் அணி முதல் பரிசை வென்றது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்தி க்காடு சிவந்தி மலர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 15 வயதிற்கு உட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடந்தது. போட்டியில் சாத்தான்குளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் ஜி எஃப் சி முத்தையாபுரம் அணியும் ஆத்தி காடு சிவந்தி மலர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதியது. இதில் முத்தையாபுரம் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது. 

பின்னர் பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு நவ முதலூர் பங்குத்தந்தை ஜேசுராஜா தலைமை வகித்தார். முதல் பரிசு பெற்ற முத்தையாபுரம் அணிக்கு விஜயாராபுரம் முத்துச்செல்வன் பரிசு வழங்கினார். . வெற்றி கோப்பையை மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஆத்தி காடு முத்துராஜ் வழங்கினார்இரண்டாம் பரிசு. பெற்றஆத்தி காடுசிவந்தி மலர் அணிக்கு கட்டாரிமங்கலம் நயினார் பரிசும், வெற்றி கோப்பையை அகஸ்டினும் வழங்கினர்.

மூன்றாம் பரிசு பெற்ற. லவுனியா முத்தையாபுரம் அணிக்கு நீர்வளத்துறை உதவி பொறியாளர் அஜித் குமார் பரிசும்,வெற்றிக் கோப்பை ஜெகன் அகில் ராஜீம் வழங்கினர்.நான்காம் பரிசு. பெற்ற ஆத்திக்காடு அணிக்கு செல்வகுமார் பரிசுத்தொகையும், வெற்றி கோப்பையை ஜெகதீஷும் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் காசி கோயில் உபதேசியார் சின்னத்தம்பி, அருள்ராஜ், ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஆத்திக்காடு சிவந்தி மலர் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory