» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்... ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி

செவ்வாய் 7, மே 2024 11:51:06 AM (IST)சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் விளாச ஐதராபாத் அணியை 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, தொடக்கத்தில் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் ரோகித் சர்மா 4 ரன்களிலும், இஷான் கிஷன் 9 ரன்களிலும் அவுட் ஆகினர். அதனையடுத்து களமிறங்கிய நமன், ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சூர்யகுமார் யாதவ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து சதம் அடித்தார்.

முடிவில் மும்பை 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 102 ரன்களும் திலக் வர்மா 37 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், கம்மின்ஸ் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory