» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: மேக்ஸ்வெல் முடிவு

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 11:03:18 AM (IST)

நடப்பு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் ஓய்வு எடுக்கவுள்ளதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024 போட்டிகளில் பெங்களூரு அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான மேக்ஸ்வெல் விளையாடிய 6 போட்டிகளில் வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மேக்ஸ்வெல் இடம்பெறவில்லை. இந்தப் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோல்வியை தழுவியது.மேக்ஸ்வெல் அணியில் இல்லாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்ஸி, அவர் சிறிது காலம் ஓய்வு கேட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மேக்ஸ்வெல் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியிருப்பதால் சில போட்டிகளில் விளையாடப் போவதில்லை. என்னால் சிறப்பாக விளையாட முடியாததால், எனக்கு பதிலாக வேறு வீரர் விளையாடட்டும் என்று கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் கூறியுள்ளேன்.நலம் பெற்று மீண்டும் நடப்பு ஐபிஎல் தொடரிலேயே விளையாடுவேன் என்று நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கடந்த நவம்பர் மாதம் முதல் மேக்ஸ்வெல் விளையாடிய 17 டி20 போட்டிகளில் இரு சதங்கள் உள்பட 520 ரன்கள் குவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory