» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சதமடித்து அசத்திய ஜோ ரூட் : சரிவிலிருந்து மீண்டது இங்கிலாந்து!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 5:51:40 PM (IST)


இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட்டின் சதத்தால் இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று (பிப்ரவரி 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சியளித்தார். ஸாக் கிராலி ( 42 ரன்கள்), பென் டக்கெட் (11 ரன்கள்) மற்றும் ஆலி போப் (0 ரன்) எடுத்து ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அவரது அபார பந்துவீச்சினால் இங்கிலாந்து அணி 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. இருப்பினும், பேர்ஸ்டோ 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்தார் பென் ஃபோக்ஸ். இந்த இணை நிதானமாக விளையாடி இங்கிலாந்தின் ஸ்கோரை அதிகரிக்கச் செய்தது. 

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தினார். பென் ஃபொக்ஸ் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டாம் ஹார்ட்லி 13 ரன்களில் ஆட்டமிழக்க ரூட் மற்றும் ஆலி ராபின்சன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். ரூட் 106 ரன்களுடனும், ஆலி ராபின்சன் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory