» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பல்கலைக்கழக வாலிபால் போட்டி: கன்னியாகுமரி கல்லூரி வெற்றி!

ஞாயிறு 18, பிப்ரவரி 2024 8:17:39 AM (IST)

கோவில்பட்டியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி அணி முதலிடம் பிடித்தது. 

கோவில்பட்டி கோவில்பட்டி கேஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் வாலிபால் போட்டி நடைபெற்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 32 அணிகள் கலந்து கொண்டன. 

இறுதிப் போட்டியில் தூத்துக்குடி வஉசி கல்லூரி அணியும் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி அணியும் மோதியதில் 3-0 என்ற செட் கணக்கில் விவேகானந்தா கல்லூரி அணி வெற்றி பெற்று பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்தது. முன்னதாக நடைபெற்ற 3 ஆம் மற்றும் 4ஆம் இடத்திற்கான போட்டியில், கன்னியாகுமரி ஜெரோம்ஸ் கல்லூரி அணியும், திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரி அணியும் மோதியதில் 2-1 என்ற செட் கணக்கில் ஜெரோம்ஸ் கல்லூரி அணி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தது. 

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். விழாவில், கேஆா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. ஆா். அருணாச்சலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாஸ முருகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், கேஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் மதிவண்ணன் உட்பட டபலர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory