» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 கிரிக்கெட் தரவரிசை: ரவி பிஷ்னோய் முதலிடம்

வியாழன் 7, டிசம்பர் 2023 10:31:28 AM (IST)



சர்வதேச டி-20 கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் ரவி பிஷ்னோய் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். 

23 வயதான ரவி பிஷ்னோய் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முடிவடைந்த 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 9 விக்கெட்கள் வீழ்த்தி சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் ஐசிசி தரவரிசையில் 699 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 692 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, இங்கிலாந்தின் ஆதில் ரஷித் ஆகியோர் தலா 679 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். மற்றொரு இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தீக்சனா 677 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளார். ரவி பிஷ்னோயை தவிர முதல் 10 இடங்களுக்குள் மற்ற இந்திய பந்து வீச்சாளர்கள் எவரும் இடம்பெறவில்லை. அக்சர் படேல் 9 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை அடைந்துள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடர்கிறார்.

அதேவேளையில் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் ஓர் இடம் பின்தங்கி 7-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத போதிலும் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஹர்திக் பாண்டியா 3-வது இடத்தில் உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory