» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரிங்கு சிங் பேட்டிங் தோனி போல் உள்ளது: கேப்டன் சூர்யகுமார் பாராட்டு

திங்கள் 27, நவம்பர் 2023 5:05:14 PM (IST)



ரிங்கு சிங் பேட்டிங் ஒரு தலைசிறந்த வீரரை நினைவூட்டியது என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.

இந்தியா -ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதில் 44 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.  வெற்றிக்கு பின் கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது: இந்த போட்டியில் டாப் ஆர்டர் வீரர்கள் எந்த ஒரு அழுத்தத்தையும் எனக்கு தரவில்லை. அவர்களே ஆரம்பத்திலிருந்து ரன்களை மிக வேகமாக குவித்துவிட்டனர். நான் இந்த போட்டிக்கு முன் வீரர்களிடம் ஒரு சில விஷயங்களை மட்டும்தான் கூறினேன். 

குறிப்பாக முதலில் பேட்டிங் செய்ய வேண்டியதாக இருந்தாலும் தயாராகிக் கொள்ளுங்கள் என்று கூறினேன். 2வதுபேட்டிங்கில் பனி அதிகமாக இருந்தது. இருந்தாலும் நாங்கள் பெரிய அளவில் ரன்களை குவித்திருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடிந்தது. 

ரிங்கு சிங் கடந்த போட்டியில் பேட்டிங் ஆடியதை பார்த்தேன். அவர் காட்டிய நிதானம் அற்புதமாக இருந்தது. அது எனக்கு ஒரு தலைசிறந்த வீரரை நினைவூட்டியது.” எனக் கூறி சிரித்தார். அப்போது அவரிடம், அது யார் என சொல்ல முடியுமா? என கேள்வி கேட்கப்பட்டது. அப்போது ”அது யார் என்று அனைவருக்கும் தெரியும்” என்று மட்டும் கூறினார்.

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரே போரோவெக் கூறியதாவது: பவர் பிளேவில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். எங்களால் மைதானத்தின் தன்மையை கணிக்க முடியாமல் போனது. எங்கள் செயல்பாடு தவறாக இருந்ததால் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்று விட்டது, என்றார். 

இதனிடையே பரிசளிப்பு விழாவிற்கு கேப்டன் மேத்யூவேட் வராதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. பேட்டிங்கின் போது உடம்பில் பல இடங்களில் அவர் அடி வாங்கினார். அதில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை, நாளை மறுதினம் மூன்றாவது போட்டி நடைபெற இருப்பதால் விரைவாக முதலுதவி பெறவே ஓய்வறைக்கு சென்றதால் அவரால் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெற்றி மூலம் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 3வது போட்டி கவுகாத்தியில் நாளை  நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory