» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மேத்யூஸ்-க்கு டைம் அவுட் கொடுத்தது ஏன்? நடுவர் விளக்கம்!

செவ்வாய் 7, நவம்பர் 2023 11:55:50 AM (IST)



உலக கோப்பை லீக் ஆட்டத்தில், வங்கதேசம் அணி இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. டெல்லியில் நடந்த 38ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. முதலில் விளையாடிய இலங்கை         அணி அனைத்து விக்கெட்டுகளையும் 279 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு விளையாடிய வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் இழந்து 282 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் தான் ஏஞ்சலே மேத்யூஸ் 2 நிமிடத்திற்குள் களத்திற்கு வரவில்லை என்ற நிலையில் வங்கதேச வீரர்கள் அவுட் கேட்டுள்ளனர். இதற்கு நடுவர்கள் டைம் அவுட் முறையில் அவுட் கொடுத்துள்ளனர். இந்நிலையில், தான் தாம் 2 நிமிடத்திற்குள்ளாக களத்திற்கு வந்துவிட்டேன் என்றூ கூறி மேத்யூஸ் வீடியோ ஆதாரத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் தான் மேத்யூஸிற்கு அவுட் கொடுத்ததற்கான காரணம் குறித்து நடுவர் ஆட்ரின் ஹோல்ட் ஸ்டாக் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது எம்சிசியின் கிரிக்கெட் விதிப்படி தான் நடந்து வருகிறது. டைம் அவுட் முறைப்படி ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்த நிலையில், அடுத்த பேட்ஸ்மேன் 2 நிமிடத்திற்குள் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

ஒரு பேட்ஸ்மேன் 2 நிமிடங்களுக்குள் களத்திற்கு வருகிறாரா இல்லையா என்பதை மூன்றாம் நடுவர் தான் வீடியோ மூலமாக பரிசோதனை செய்வார். ஆனால், மேத்யூஸ் களத்திற்கு வருவதற்கு 2 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக வங்கதேச வீரர்கள் அவுட் கேட்க, வீடியோ ஆதாரத்துடன் 3ஆம் நடுவர் கள நடுவருக்கு அவுட் வழங்கலாம் என்று கூறியதைத் தொடர்ந்து கள நடுவரும் அவுட் கொடுத்துள்ளார்.

மேலும், ஹெட்மெட் உடைந்த நிலையில், தான் அதனை மாற்ற சென்றேன் என்று மேத்யூஸ் கூறுகிறார். ஆனால், அவர் ஹெல்மெட் உடைந்துவிட்டது என்று கூறுவதற்கு முன்பே 2 நிமிடத்தை தாண்டிவிட்டார். இதன் காரணமாகத்தான் அவருக்கு அவுட் வழங்கினோம் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory