» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தெண்டுல்கரின் சாதனையைமுறியடித்தார் ரச்சின் ரவீந்திரா!

ஞாயிறு 5, நவம்பர் 2023 10:14:31 AM (IST)இளம் வயதில் உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனையை ரச்சின் ரவீந்திரா முறியடித்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அனியின் 23 வயது ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஏற்கனவே இங்கிலாந்து (123 ரன்கள், நாட்-அவுட்), ஆஸ்திரேலியாவுக்கு (116 ரன்கள்) எதிரான ஆட்டங்களில் சதம் அடித்திருந்த ரச்சின் ரவீந்திரா நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளாசிய 3-வது சதம் இதுவாகும். இதன் மூலம் 25 வயதை எட்டும் முன்பு உலகக் கோப்பை போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரச்சின் படைத்தார். 

இதற்கு முன்பு இந்த வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 2 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதனை ரச்சின் நேற்று தகர்த்தார். மேலும் ரச்சின் இதுவரை 523 ரன்கள் குவித்து இருப்பதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் குறைந்த வயதில் (25 வயதுக்கு முன்) அதிக ரன் சேர்த்திருந்த தெண்டுல்கரின் (1996-ம் ஆண்டு 523 ரன்கள்) சாதனையை சமன் செய்தார். அவர் எஞ்சிய ஆட்டத்தில் தெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

ரச்சின் ரவீந்திரா 3 சதம் அடித்ததன் மூலம் ஒரு உலகக் கோப்பை போட்டியில் அதிக சதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை தனதாக்கினார். அத்துடன் அறிமுக உலகக் கோப்பை போட்டியில் 3 சதம் விளாசிய முதல் வீரர் என்ற அரிய சாதனையையும் படைத்தார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நேற்றைய ஆட்டத்தில் 95 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 89 ரன்னை எட்டிய போது உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை ஸ்டீபன் பிளமிங்கிடம் (1,075 ரன்கள், 33 ஆட்டம்) இருந்து தட்டிப்பறித்தார். வில்லியம்சன் 25 ஆட்டங்களில் ஆடி 2 சதம், 5 அரைசதம் உள்பட 1,084 ரன்கள் எடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory