» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பை: ஒரே நாளில் 6 சாதனைகள் படைத்த குயின்டன் டி காக்!

வியாழன் 2, நவம்பர் 2023 12:08:00 PM (IST)உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டிகாக் நேற்று ஒரே நாளில் 6 சாதனைகளை படைத்திருக்கிறார். 

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வெறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேயில் நெற்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதியை நோக்கி முன்னேறியது. 

இந்த போட்டியில் சதம் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டிகாக் நேற்று ஒரே நாளில் 6 சாதனைகளை படைத்திருக்கிறார். கடந்த மூன்று உலகக் கோப்பை தொடரில் ஏதேனும் ஒரு வீரர் அடுத்தடுத்து சதம் விளாசி சாதனை படைத்து வருகிறார்கள். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் ஜாம்பவான் சங்ககாரா நான்கு சதம் அடித்தார். இதை அடுத்து 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா ஐந்து சதங்கள் அடித்து புதிய ரெக்கார்ட் ஒன்றைப் படைத்தார்.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்கா வீரர் குயிண்டன் டிகாக் நான்கு சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இந்த தொடர் முடிந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இன்று மட்டும் பல ரெகார்டுகளை அவர் படைத்திருக்கிறார். 

உலககோப்பை வரலாற்றிலே ஒரு தொடரில் 500 ரன்களை தொட்ட முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை குயிண்டன் டி காக் படைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை குயிண்டன் டி காக் படைத்திருக்கிறார். மேலும், ஒரு உலகக்கோப்பை தொடரில் நான்கு சதம் அடித்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெயரை குயின்டன் டிகாக் பெற்று இருக்கிறார்.

இதற்கு முன்பாக சங்ககாரா ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளனர். மேலும் ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெயரும் குயின்டன் டிகாக்கிற்கு சேர்ந்தது. இதனை தொடர்ந்து நடப்பு உலகக்கோப்பை தொடரில் 500 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையும் குயிண்டன் டிகாக் பெற்றார். உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதல் ஏழு இன்னிங்ஸில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையும் குயிண்டன் டிகாக்கிற்கு கிடைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory