» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலகக் கோப்பை தொடர்களில் அதிகமுறை தோல்வி : இலங்கை அணி புதிய சாதனை!
செவ்வாய் 31, அக்டோபர் 2023 3:49:08 PM (IST)

உலகக் கோப்பை தொடர்களில் அதிகமுறை தோல்வியடைந்த அணி என்ற சாதனையை இலங்கை படைத்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், புணேவில் நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் இலங்கையும், ஆப்கானிஸ்தான் அணியும் திங்கள்கிழமை மோதின.இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடரில் விளையாடி 6 போட்டிகளில் 4 தோல்விகளை சந்தித்துள்ள இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 43 முறை தோல்வியை சந்தித்துள்ள இலங்கை அணி, ஜிம்பாப்வே அணியின் (42 தோல்விகள்) சாதனையை முறியடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 35 தோல்விகளுடன் உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










