» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணிக்கு ஹாட்ரிக் வெற்றி!

செவ்வாய் 31, அக்டோபர் 2023 10:01:15 AM (IST)மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 2-1 கோல் கணக்கில் நேற்று சீனாவை வீழ்த்தி தொடா்ந்து 3-ஆவது வெற்றியை இந்தியா பதிவு செய்தது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக தீபிகா (15’), சலிமா டெடெ (26’) ஆகியோா் கோலடிக்க, சீனாவுக்காக ஜியாகி ஜோங் (41’) ஸ்கோா் செய்தாா். இதர ஆட்டங்களில் ஜப்பான் 4-0 கோல் கணக்கில் தாய்லாந்தை சாய்க்க, மலேசியா - தென் கொரியா ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்தியா அடுத்த ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஜப்பானை செவ்வாய்க்கிழமை சந்திக்கிறது. அந்நாளில் தென் கொரியா - தாய்லாந்து, மலேசியா - சீனா அணிகளும் மோதுகின்றன. இத்துடன் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக தோல்விகளை (43) சந்தித்த அணியாகியிருக்கிறது இலங்கை. முன்னதாக ஜிம்பாப்வே 42 தோல்விகளுடன் அந்த இடத்தில் இருந்தது.

உலகக் கோப்பை போட்டிகளில் இத்துடன் 3-ஆவது முறையாக இலங்கையை சந்தித்த ஆப்கானிஸ்தான், முதல் முறையாக வென்றிருக்கிறது. அத்துடன், உலகக் கோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அடுத்தடுத்து இரு வெற்றிகளை பதிவு செய்ததும் இதுவே முதல் முறையாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory