» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தலாய்லாமாவை குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்ற நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள்!

செவ்வாய் 24, அக்டோபர் 2023 12:16:53 PM (IST)தர்மசாலாவில் புத்த மத மதத்தலைவர் தலாய்லாமாவை நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றனர்.

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்திய அணி கடந்த 22ம் தேதி நியூசிலாந்தை தர்மசாலாவில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் அபார பேட்டிங்கால் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கு பின்னர் நியூசிலாந்து தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இதே மைதானத்தில் சந்திக்கிறது.

இந்நிலையில் தர்மசாலாவில் தங்கியுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இன்று தங்களது குடும்பத்தினருடன் சென்று புத்தமத துறவியான தலாய்லாமாவை சந்தித்துள்ளனர். இந்த போட்டோவை தலாய்லாமா தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory