» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!
செவ்வாய் 24, அக்டோபர் 2023 11:52:45 AM (IST)
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி உடல்நலக் குறைவால் நேற்று 23 காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது: மறைந்த கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடியின் பந்துவீச்சு இந்திய அணிக்கு எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளது. வருங்கால கிரிக்கெட் வீரர்களுக்கு அவர் தொடர்ந்து ஊக்கமளிப்பார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.