» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்ப்பு!

செவ்வாய் 10, அக்டோபர் 2023 12:35:26 PM (IST)

எதிர்வரும் 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பேஸ்பால், சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரிட்டனில் இருந்து வெளிவரும் ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு இந்த விளையாட்டு பட்டியலை உறுதி செய்துள்ளதாகவும். இது தொடர்பாக ஒலிம்பிக் திட்டக் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு, மும்பையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: கடந்த 1900 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டு உள்ளது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்படவில்லை. இத்தகைய சூழலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த பரிந்துரை தொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது."லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். நூறாண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பது முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய விளையாட்டு மதிப்பீடு சார்ந்த செயல்முறையில் கிரிக்கெட் விளையாட்டுக்கு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு வழங்கிய ஆதரவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சூழலில் மும்பையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வுக்கு பிறகு எடுக்கப்படும் இறுதி முடிவை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம்” என ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே (Greg Barclay) தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory