» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசிய விளையாட்டுப் போட்டி : கிரிக்கெட்டில் தங்கம் வென்றது இந்திய அணி!
சனி 7, அக்டோபர் 2023 3:58:33 PM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றது.
டி20 முறையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட் அரையிறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா இறுதிச் சுற்றில் ஆப்கானிஸ்துடன் மோதியது. இந்திய அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது. 10 ஓவருக்கு ஆப்கானிஸ்தான் அணி 50/4 ரன்கள் எடுத்துள்ளது.
அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, பிஷ்னோய் தலா 1 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய்- ஜிதேஷ் ஷர்மா இணைந்தி 1 ரன் அவுட்டினையும் செய்துள்ளார்கள். 18.2 ஓவரில் ஆப்கானிஸ்தான் 112/5 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. பின்னர் மழை நிற்காத காரணத்தினால் போட்டி ரத்தானது. புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்த இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.
சீனாவின் ஹாங்ஷௌ நகரில் நடைபெற்று வரும் ஆசியப் போட்டிகளின் வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மகளிர் கிர்க்கெட் அணி தங்கம் வென்றிருந்த நிலையில் ஆடவர் கிரிக்கெட் அணியும் தங்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு 2 தங்கம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










