» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!

புதன் 27, செப்டம்பர் 2023 11:03:52 AM (IST)ஆசிய விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியா தங்க பதக்கம் வென்றுள்ளது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.  இன்று நடைபெற்ற போட்டியில், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் அகியோர் கொண்ட இந்திய அணி 1,759 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தது. 

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory