» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ருதுராஜ், சுப்மன் கில் அதிரடி: முதல் போட்டியில் ஆஸி.யை வென்றது இந்திய அணி!
சனி 23, செப்டம்பர் 2023 10:10:56 AM (IST)

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஸ் களமிறங்கினர். மிட்செல் மார்ஸ் முதல் ஓவரிலேயே முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டேவிட் வார்னருடன் ஸ்டீவ் சுமித் ஜோடி சேர்ந்து ஆடினர். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 276 ரன்களை குவித்து, அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதைத் தொடர்ந்து 277 ரன்களை குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 71 ரன்களையும், 74 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் கே.எல். ராகுல் நிதானமாக ஆடி 58 ரன்களை சேர்த்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










