» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: 8-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஞாயிறு 17, செப்டம்பர் 2023 7:19:12 PM (IST)ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 

ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று (செப்டம்பர் 17) இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் இலக்கை எட்டி ஆசியக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இஷான் கிஷன் 23 ரன்களுடனும், ஷுப்மன் கில் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆசியக் கோப்பையில் இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory