» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய கோப்பை: அக்‌ஷர் விலகல்? தமிழக வீரர் சேர்ப்பு!

சனி 16, செப்டம்பர் 2023 4:48:29 PM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக அக்‌ஷர் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி சூப்பா் 4 ஆட்டத்தில் வங்கதேசம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெள்ளிக்கிழமை வென்றது. இதையடுத்து சூப்பா் 4 சுற்றில் ஆறுதல் வெற்றியுடன் போட்டியிலிருந்து வங்கதேசம் வெளியேறியது.

ஷுப்மன் கில், அக்‌ஷர் படேல் போராட்டம் வீணாகியது. இந்தப் போட்டியின்போது அக்‌ஷர் படேலுக்கு தொடைப்பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. பேட்டிங்கின்போது சிரமத்துடன் விளையாடியதை பார்க்க முடிந்தது. அவர் ஆட்டமிழக்காமல் இருந்தால் இந்தியா நிச்சயம் வென்றிருக்கும். 

இந்நிலையில் காயம் காரணமாக அக்‌ஷர் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பையில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் உள்ளதால் வாஷிங்டன் சுந்தர் நிச்சயமாக அணியில் இருப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.  நாளை (செப்.17) மதியம் 3 மணிக்கு இந்தியா இலங்கை அணிகள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பலப் பரீட்சை செய்ய உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory