» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் லீக் போட்டிக்கான தேதி மாற்றம்?
வியாழன் 27, ஜூலை 2023 12:34:41 PM (IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டிக்கான தேதி மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை கடந்த மாதம் ஐசிசி வெளியிட்டது. அதன்படி அகமதாபாத்தில் அக்.5ம் தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அக் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.நவராத்திரி கொண்டாடட்டத்தின் முதல் நாள் அக் 15ம் தேதி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டியை வேறொரு தேதிக்கு மாற்றுமாறு பிசிசிஐக்கு அம்மாநில போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், அகமதாபாத்தில் பாதுகாப்பு பணிகளுக்கு காவலர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று, இந்தியா பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தின் தேதியை பிசிசிஐ மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










